PIB
காஷ்மீரின் கிழக்குப் பகுதியான லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் அரசு நிறைவேற்றிக் கொண்டிருந்த சாலை போடும் பணி சீனா இராணுவத்தின் தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்துள்ள பதில் விநோதமானது.
மக்களவையில் கடந்த புதன்கிழமை எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி, எல்லைப் பகுதியில் சீன இராணுவம் மேற்கொண்ட 20க்கும் மேற்பட்ட ஊடுருவல்களை எவ்வாறு மத்திய அரசு சாதாரணமானதாக எடுத்துக் கொள்கிறது என்று புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதியில் நடந்த சாலை அமைப்புப் பணியை சீன இராணுவம் தலையிட்டு எப்படி நிறுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதே கேள்வியை சிவசேனா உறுப்பினர் அனந்த் கீத்தேயும் எழுப்பியுள்ளார்.
இதற்கு அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா அளித்த பதில் இதுதான்: “அங்கு (லடாக்கில்) சாலை அமைக்கும் பணியைத் துவக்கியதிலோ அல்லது நிறுத்தியதிலோ இந்திய அரசிற்கு எந்த பங்கும் இல்லை. அது முழுமையாக ஜம்மு-காஷ்மீர் அரசு எடுத்த முடிவாகும்”. எப்படியிருக்கிறது அயலுறவு அமைச்சரின் பதில்!
லடாக்கில் நமது நாட்டின் (இராணுவத்தின்) கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், அந்தப் பகுதியின் நிர்வாக அதிகாரம் பெற்ற மாநில அரசு சாலை போடும் திட்டத்தைத் துவக்கியது தவறு என்று கூறுகிறாரா அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா? காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் இந்திய - சீன (திபெத்) எல்லைப் பகுதியில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control), இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள டெம்சோக் என்ற கிராமத்தில் 8 கி.மீ. நீளத்திற்குச் சாலை போடும் பணி நடந்து வந்தது. அதனை சீனா என்ன சொல்லி நிறுத்தியுள்ளது? இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்ட பகுதியில் எந்தப் பணியையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறியுள்ளது. சீனா கூறியதை மத்திய அரசு ஏற்கிறதா? என்பதே கேள்வி.
FILE
அப்படி தகராறுக்கு உட்பட்ட பகுதி என்று சீனா கூறும் எல்லைப் பகுதிகளில் எல்லாம் எந்த விதமான திட்டத்தையும் நிறைவேற்றக் கூடாது என்பதை இந்தியா ஒப்புக்கொள்ளுமா? அப்படியானால், அருணாச்சலப் பிரதேச மாநிலமே தகராறுக்கு உட்பட்டப் பகுதி என்று சீனா கூறியதையும், அங்கு திபெத் தலைவர் தலாய் லாமா செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும், அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் செல்லக் கூடாது என்று கூறியதை மத்திய அரசு ஏற்காதது ஏன்?
எல்லைப் பகுதியில் நமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டப் பகுதியில் சாலை போடுவதை நிறுத்துமாறு சீனா எந்த அடிப்படையில் ஆட்சேபித்தது? அதனை என்பதை இந்திய அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா விளக்காதது விநோதமானது.
எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ள நிலையில், அந்தந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றக் கூடாது என்று ஒரு நாடு மற்றொரு நாட்டை எவ்வாறு நிர்பந்திக்கலாம்? சீன இராணுவம் நேரிடையாக தலையிட்டு சாலை போடும் பணியை நிறுத்தியதாகவே உள்ளுர் மக்கள் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. அப்படியானால் அந்த எல்லைப் பகுதியில் நமது படைகள் இல்லையா?
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஊடுவல்களை (இந்த ஆண்டில்) செய்துள்ளது சீனா. அதனை ஒப்புக் கொள்ளும் மத்திய அரசு, சீனத்திற்கு வெளிப்படையான கண்டனத்தைத் தெரிவிக்காதது ஏன்? இதைத்தான் முரளி மனோகர் ஜோஷி கேட்டுள்ளார். இதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்துள்ள பதில், “இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க முயன்று வருகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை பெரிதாக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். அப்படி ஒரு அணுகுமுறையை சீனா கடைபிடிக்கவில்லையே! “1962இல் கற்ற பாடத்தை இந்தியா மறந்துவிட்டது போல” என்றல்லவா கூறியது. இந்தியா மட்டும் தணிந்து போகும் இப்படிப்பட்ட பலவீனமான அணுகுமுறைக்கு காரணம் என்ன?
இதுவே பாகிஸ்தான் இராணுவம் செய்திருந்தால் இதேபோன்ற பதிலை அளிக்குமா மத்திய அரசு? “கடுமையான பதிலடி கொடுப்போம்” என்றல்லவா முழங்கியிருக்கும்! காஷ்மீரின் மேற்குப் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நான்கு, ஐந்து தீவிரவாதிகள் ஊடுருவதையே பெரிதாக்கி செய்தி கொடுக்கும் இந்திய எல்லைக் காவல் படையும், இராணுவமும், கிழக்குப் பகுதியில் சீனாவின் இராணுவமே ஆண்டுக்கு 50 முறை ஊடுருவல் நடத்தும் நிலையிலும் அமைதிகாப்பதேன்?
PIB
“சீனாவை எதிர்கொள்ள நாங்கள் தயாரில்லை என்று நீங்கள் (மத்திய அரசு) கூறுங்கள். இல்லையென்றால் 1962ஆம் ஆண்டு நடந்ததுபோல் மீண்டும் நடக்கும், நாமும் வாயைப் பிளந்துகொண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டிவரும்” என்று முரளி மனோகர் ஜோஷி எச்சரித்துள்ளார்.
“சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய அரசு அஞ்சுகிறது” என்று சிவசேனா உறுப்பினர் அனந்த் கீத்தே கூறியதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்த பதில் ஒரு அணு ஆயுத வல்லரசின் குரலாக இல்லை என்பது வருந்தத்தக்கது.
இன்று இந்தியாவின் (காஷ்மீரின்) அங்கமாக உள்ள லே பகுதி முழுவதும் தகராறுக்கு உட்பட்டப் பகுதி என்று சீனா கூறினால் உடனே அங்கு தனது நிர்வாகத்தை திரும்பப் பெறுமா இந்தியா?
பயங்கரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டுப் பிரச்சனைகள், மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் என்று எல்லா திசைகளிலும் மிரட்டலை சந்தித்துக் கொண்டிருக்கும் பலவீனமான பாகிஸ்தானை ஒரு அச்சுறுத்தலாக மத்திய அரசு காட்டுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் தனது இராணுவத்தைக் கொண்டே அத்து மீறும் சீனாவுடன் இளகிய, பலவீனமான இராஜ தந்திரப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது.
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இதுதான் நிலைமை என்றால், சீனாவை நோக்கிய இந்தியாவின் பார்வை நிச்சயமற்றதாகவே தெரிகிறது.
தனது வாதத்தில் முரளி மனோகர் ஜோஷி கூறியதுபோல, சீனாவை எதிர்கொள்ளும் ஒரு நீண்ட கால கொள்கையை இந்தியா உருவாக்க வேண்டும், அதனடிப்படையில் தனது பன்னாட்டு உறவுகளை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
Thursday, December 24, 2009
# 10
“Super Star”
RAJINIKANTH
“I don’t like to do romance with young heroines.”
# 9
“Universal Hero”
KAMAL HASSAN
“I don’t like to keep ‘kiss scene’ in my films.”
# 8
“Cheeyan”
VIKRAM
“My age is only 24.”
# 7
SURIYA
“My height is 8.5 feet.”
# 6
DHANUSH
“I am going to act in Part 3 of Terminator.”
# 5
“Ultimate Star”
AJIT KUMAR
“Red is a good movie.”
# 4
“Pratchi Thalapathy”
VISHAL
“After the success of Satyam film, we are planning to take Satyam Part 2.”
# 3
“Little Super Star”
T.R.SILAMBARASAN
“I don’t like romance scenes.”
# 2
JEEVA
“Only, my films run for more than 800 days.”
Here comes the last, but not least…
MEGA SUPERB JOKE
# 1
“Ilaya Thalapathy”
Dr. VIJAY
“I am a Hero.”
| Dr.Vijay: Naan aadicha thangamata naalu masam thoongamata!!!!!!!!!!!!!!!!!!!
|
Thursday, April 30, 2009
IT COMPANY மாப்பிளைஇன் அவலம்
நாடறிந்த ஒரு IT கம்பெனியில் Software Engineer ஆகிய எனக்கு நாலு கழுதை வயதாகிவிட்டதால் திருமண ஏற்பாடு நடந்தது. நாளை பெண்பார்க்கும் படலம். நல்ல குடும்பம், அழகான, அறிவான வரன்...என்னை தான் சொல்கிறேன்!!!!. யாருக்கு தான் என்னை பிடிக்காது.
பெண்ணின் தகப்பனார் வங்கியில் மேலாளராக இருக்கிறார்.
பார்க்கவிருக்கும் பெண்ணின் போட்டோ கூட தரவில்லை. கேட்டதற்கு, "நாங்க Orthodox family" என பதில் வந்தது. "Orthodox Family" ல இருக்கவங்கள போட்டோ எடுத்தா பிரிண்ட் விழாதான்னு நீங்க அதஇத கேட்டு என்னோட கல்யாணத்த நிறுத்திடாதீங்க ப்ளீஸ்.
இது தான் முதல் முறை. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அம்மா அப்பா எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணை பார்க்க வேண்டும். அப்பொழுது மொத்த குடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும்.
நாளை என்ன நடக்கும்...
"ஏன்டா பொண்ணைத்தான பாக்குற? ஏதோ Zoo ல காண்டாமிருகத்த பாக்குற மாதிரி திகிலோட பாக்குறியே...கொஞ்சம் Romance ஆ பாருடா" என தாய்மாமா சொல்வாரோ?
பல சிந்தனைகள், பயங்கள், நெருடல்கள். இதற்கு ஒருவழி இருக்கிறது. என்னுடைய நெருங்கிய நண்பன் பட்டாபி உடன் இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும்.
பட்டாபி என்னுடைய பால்ய சிநேகிதன். மிக நல்லவன், வெகுளி. எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். நாளை இவனும் இருந்தால், ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான். எல்லோர் கவனமும் இவன் மீதே இருக்கும். நான் நிம்மதியாக பெண்ணை பார்க்கலாம் பேசலாம்.
பட்டாபி விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன், "நானே சொல்லனும்னு நெனச்சேன். கண்டிப்பா வரசொல்லு" என்றார்.
மறுநாள் காலை...9:05 மணி. இராகுகாலம் முடிந்து புறப்பட்டோம். வழியெல்லாம் பெண்ணைப்பட்றியே சிந்தனை. அழகாக இருப்பாளா, எந்த சினிமா நடிகை மாதிரி இருப்பாள்? கண்கள் எப்படி இருக்கும்? புதிய அனுபவமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது!!. பெண் வீட்டை அடைந்துவிட்டோம்.
வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது. அது எங்களை பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது. காலிங் பெல்லை அழுத்தினார் அப்பா.
உள்ளே இருந்து ஒரு ஐந்து ஆறு தலைகள் திபுதிபுவென வெளியே வந்தார்கள். வாங்க வாங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா? வாங்க உள்ள வாங்க என்றார்கள்.
உள்ளே நுழைந்தோம். ஹாலில் ஒரு போட்டோவை Frame செய்து மாட்டி வைத்து இருந்தார்கள். அதில் ஒரு பெண்ணும், வெளியில் கட்டி போட்டு இருக்கும் நாயும் இருந்தார்கள். அப்பா சொன்ன அடையாளம் எல்லாம் வச்சி பார்த்தா, இவ தான் நான் பாக்க போற பொண்ணா இருக்கணும். அடடா என்ன அழகு.. நான் என் மனதை பறிகொடுத்தேன். உடனே என் மனதில் டூயட். "ஏதோ சொல்ல நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்". பாடி முடிக்கவில்லை... அதற்குள் பட்டாபி வாயெடுத்தான்.
"அந்த போட்டோ ல இருக்க ரெண்டு நாயும் அழகா இருக்குல்ல? " என்றான்.
"டேய் அதுல ஒன்னு எனக்கு பார்த்து இருக்க பொண்ணுடா. "
"சாரி சாரி ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி இருந்ததா நான் Confuse ஆயிட்டேன். "
"என்னடா பதில் இது. டேய் வேற யார்கிட்டயாவது இப்படி சொல்லிடாத. "
இந்த நேரத்தில், ஒரு ஆன்ட்டி என்னருகில் வந்தார். "hai, How is Your job?" என்றார்.
"நல்லா இருக்கு. ஆமா நீங்க யாரு? " என்றேன்.
"நான் பொண்ணோட சித்தி, US ல இருக்கேன். நடராஜ் நாளைக்கி வருவார். "
"நடராஜ் உங்க பையனா? "
"No No, He is my Husband. கூட காமராஜ் ம் வருவார்."
"உங்களுக்கு மொத்தம் எத்தன Husband?" என கேட்டான் பட்டாபி!!!!
"you rubbish, காமராஜ் என்னோட Son."
"சாரி ஆன்ட்டி, பேர் rhyming ஆ இருந்ததால கேட்டேன். "
ஆன்ட்டி என்னிடம், "Is there any Onsite opportunity? "
நமக்கு எங்க அதெல்லாம்... நான் Offshore ல இருக்க figure அ தான் இன்னும் site அடிச்சிகிட்டு இருக்கேன் என நினைத்துக்கொண்டு.... "No Onsite, Only Offshore Site Opportunity." என இல்லாத புது வார்த்தையை சொன்னேன்.
"Oh That is also very good na!!?!!" என்றார். நடராஜ் Con-Call ல் பேசியதை வைத்து இந்த ஆன்ட்டி englishல் படம் போடுவது அப்பட்டமாக தெரிந்தது.
நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண கூப்பிடுங்க என்றார் என் அப்பா.
பெண் தயாராகிவிட்டாள். இதோ கூப்புடுறேன் என்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணை அழைத்தார். பெண் ரூம் ல் இருந்து வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு இருப்பது அப்பாவின் முகபாவனைகளில் தெரிந்தது. "வாம்மா ரொம்ப சாது, ஒன்னும் பண்ணாது என்றார்."
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் யாரை சொல்கிறார். "அட வாம்மா, கடிக்காதுனு சொல்றேன் ல? "
என்னை தான் சொல்லி இருக்கிறார். நாய் வளர்ப்பவர் என்று தெளிவாக காட்டினார் அந்த மனுஷன்.
ஒரு வழியாக பெண் வெளியில் வந்தாள். போட்டோவில் பார்த்ததைவிட அநியாயத்திற்கு ஒல்லியாக இருந்தாள். அடப்பாவிங்களா போட்டோவ Zoom-In பண்ணி பிரிண்ட் போட்டீங்களா?
"பொண்ணு இருக்குற எடமே தெரியாதுன்னு சொல்வாங்களே அது இது தானா?" என்றான் பட்டாபி பெண்ணின் தகப்பனாரைப்பார்த்து.
"டேய் நீ வேற வேல் பாய்ச்சாதடா!!!" என்றேன். ஒல்லியாக இருந்தாலும் லட்சணமாக இருந்தாள். எனக்கு பிடித்துதானிருந்தது.
பெண்ணை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்கள். பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பித்தார், "இந்த சம்பந்தம் எங்களுக்கு ரொம்ப திருப்தி ஆனா இதுல ஒரு விஷயத்த நான் சொல்லணும். பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம். அத கொஞ்சம் பார்த்துக்கோங்க" என்றார்.
உடனே பட்டாபி, "ஆயில்ய நட்சத்திரத்துல என்ன சார் பிரச்னை?"
"அதுக்கு இல்லை, பெண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்னா, மாப்பிள்ளைக்கு அம்மா இருக்க கூடாது." என்றார்.
அய்யய்யோ என தோன்றியது எனக்கு. ஆனால் பட்டாபி அசராமல் சொன்னான். "அதுக்கென்ன Sir, இன்னைக்கி சாயங்காலமே மாப்பிள்ளையோட அம்மா கதைய முடிச்சிவிட்டுடறோம். நாளைக்கே உங்களுக்கு சேதி அனுப்பிடறோம். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம். என்னம்மா நான் சொல்றது" என என்னுடைய அம்மாவையே கேட்டான்.
எங்க அம்மா சாமி வந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார்.
"Sir, அதுல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனசு ஒத்து போச்சினா கல்யாணத்த முடிச்சிடலாம்" என்றார் என்னுடைய அப்பா.
ரொம்ப சந்தோஷம், "அப்போ பையனோட கடைசீ ஆறு மாச Salary Slip அப்புறம் ஆறு மாச Bank Statement குடுத்துவிடுங்க" என்றார் பெண்ணின் பாட்டி!
உடனே பட்டாபி, "பாட்டி நாங்க பொண்ணு பாக்க வந்தோம். Housing Loan வாங்க வந்தோம்னு நெனச்சிட்டீங்க போல" என்றான்.
பெண்ணினுடைய அப்பா இடைமறித்தார். "இல்லை இல்லை, அவுங்க சரியா தான் கேக்குறாங்க அவுங்க கேட்ட documents அப்புறம் உங்க கம்பெனியோட அஞ்சி வருஷ Balance Sheet, பேங்க் statement, auditor யாரு, உங்க கம்பெனி முதலாளி யாரு, இப்போ எங்க இருக்கார். எல்லா detail ம் குடுத்து அனுப்புங்க" என்றார்.
"அதற்கு பட்டாபி, நாட்டு நடப்பு முழுக்க தெரிஞ்சி வச்சி இருக்கீங்க. குடுக்குறது பத்தி இல்லை சார், இவனோட கம்பெனி முதலாளி பத்தி எல்லா detail ம் விசாரிச்சிட்டு, இவனைவிட அவரு better ஆ இருக்காருன்னு நீங்க அவருக்கு பொண்ண குடுத்துட கூடாதேனு பாக்குறோம்" என்றான்.
"பொண்ண குடுக்குறதுன்னா சும்மாவா?? " என்றார் பெண்ணின் தகப்பனார்.
"அட நீங்க வேற சார், எங்க அப்பா கூட என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு முன்னாடி, லூஸ் மாதிரி நீங்க கேட்ட கேள்வி எல்லாம் கேட்டு தான் கட்டி குடுத்தாரு. ஆனா பாருங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது...மாப்பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆன சேதி. அதனால எது தேவையோ அத கேளுங்க சார். டேய் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாடா??" என்றான் என்னைப்பார்த்து.
"டேய் நீ கொஞ்சம் சும்மா இருக்கியா??" என்றேன்.
"அப்போ நாங்க புறப்படறோம்" என்றார் என்னுடைய அப்பா.
"ரொம்ப சந்தோஷம். ஒரு வாரத்துல சொல்லி அனுப்பறோம். " இது பெண்ணின் தகப்பனார்.
"ஏதாவது குழந்தை இருந்தா குடுங்க சார், பேர் வச்சிட்டு கிளம்பறேன்" என்றான் பட்டாபி.
"குழந்தை எதுவும் இல்லை. அடுத்த வாரம் தான் எங்க நாய், குட்டி போட போகுது. போட்ட உடனே சொல்லி அனுப்பறோம்" என்றார் அந்த US ஆன்ட்டி.
"அப்படியா, என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா? " இது பட்டாபி.
"இல்லை. " இது ஆன்ட்டி.
"pregnant ஆன ஆறு மாசத்துல என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணா தெரிஞ்சிடும்" என்றான்.
எனக்கு ஐயோ என கத்த வேண்டும் போல இருந்தது. "டேய் பட்டாபி கிளம்புடா" என்றேன்.
வீடு திரும்பும்போது அம்மா, அப்பாவை பார்த்து கேட்டார், "ஏங்க, வழக்கமா பையன் வீட்லதான தகவல் சொல்லி அனுப்பரோம்னு சொல்வாங்க. இங்க என்ன பொண்ணோட அப்பா சொல்றாரு? "
"எனக்கும் அது தான் யோசனையா இருக்கு. பார்க்கலாம் விதின்னு ஒன்னு இருக்குல்ல" என்றார் அப்பா.
ஒரு வாரம் ஆகியும் தகவல் வரவில்லை. நாங்களே தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லையாம்.
அவர்கள் சொன்ன காரணம் : "பையனுக்கு சேர்க்கை சரி இல்லை!".
அடப்பாவி பட்டாபி, இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா!..
விரக்தியோடு அடுத்த வரனுக்காக காத்திருக்கிறேன்!!
பி.கு. : உங்களுக்கு தெரிஞ்ச நல்ல குடும்பத்துல ஏதாவது பொண்ணு இருந்தா எனக்கு சொல்லுங்க. கண்டிப்பா பட்டாபிய கூட்டிகிட்டு வரமாட்டேன். இது சத்தியம
Wednesday, April 29, 2009
Wednesday, April 1, 2009
சீனாவின் உளவு வேலை
க்தொச்ட் நெட் (GHOST NET) என்ற இந்த சீனா கம்ப்யூட்டர் நிறுவனம் உலகில் நுற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களின் தகவலகளை திருடிஉள்ளது திருடப்பட்ட கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் பயன்படுத்துபவை அல்ல
அது மட்டும் இல்லாமல் ஈரான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளின் வெளி உறவு மத்திரிகளின் கம்ப்யூடடர்கள் ஹாக்கிங் செய்யபட்டுள்ளன
இதில் இந்தியாயவையும் விட்டு வைக்க வில்லை
இந்தியா, பாகிஸ்தான், ஜெர்மனி, தாய்லாந்து போன்ற நாடுகளின் தூதரக அலுவலக கம்ப்யூட்டர் தகவல்கள் திருடபட்டுள்ளன
ஆனால் பண்ணதுக்காக ஹக்க் செய்பவர்கள் எதற்காக வெளி உறவு மத்திரிகளின் கம்ப்யூட்டர்களை ஹக்க் செய்ய வேண்டும்
இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி சுலபமானது
அவர்கள் ஒரு மெயில் அனுப்புவர்கள் அதை நீங்கள் ஓபன் பண்ணினால் அந்த கம்ப்யூட்டர் அவர்கள் கையில்
அவர்கள் உங்கள் வேப்காமர மற்றும் மைக்கை ஓபன் பண்ண முடியும்
உங்கள் கம்ப்யூட்டர் டாகுமென்ட்களை உங்களுக்கு தெரியாமலே மாற்ற முடிஉம்
இப்போது உலகில் உள்ள அனைத்து நாடுகளின் வெளி உறவு தகவல்களும் சீனா கையில்
இதை இந்தியா கண்டுபிடிக்க வில்லை
கனடாவில் உள்ள டோரண்ட பல்கலைகழகம் than kandu pidithulathu
கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்கவுக்கு சவால் விடும் இந்தியா கண்ணினி துறையால் கூட இதுமாதிரி செய்ய முடியவில்லை
சரி இந்தியன்ஸ் திருடத்தான் மாட்டார்கள் தடுக்கவுமா மாட்டார்கள்??????
இதில் இந்தியா சீனாவை முந்துமா என்ற கற்ப்பனை வேறு
see this links if u have doubt
http://www.voanews.com/english/2009-03-31-voa12.cfm
http://news.bbc.co.uk/2/hi/americas/7972702.stm
Subscribe to:
Comments (Atom)
















